ஆஸ்ட்ரேலியாவில் விநாயகரை கேலிசெய்யும் விதமாக நடந்த நாடகத்திற்கு இந்துக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவில் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நாடகத்திலேயே விநாயகரை கேலிசெய்வது போல காட்சி இடம்பெற்றது.
விநாயகரை கைது செய்து அவரிடம் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போல இடம்பெற்ற இந்த காட்சி,கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,இதற்கு இந்துக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விநாயகரை நாஜி உளவுப்படை கைது செய்து துன்புறுத்துவது போன்ற காட்சி பொருத்தமற்றது என அமெரிக்கவாழ் இந்து சமூகநல ஆர்வலர் ராஜன் சேத் ஆட்சேபம் தெரிவித்தார்.
விநாயகர் கோயில்களிலும், வீடுகளிலும் வழிபட்டுவரும் கடவுள். அந்த கடவுளை தியேட்டர்களிலும், மேடைகளிலும் கேலிப் பொருளாக்கி இருக்கக்கூடாது என அவர் கூறினார்.
இதுபோன்று மேலும் பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.