பாகிஸ்தானின் கராச்சி நகரில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு அருகே கார் குண்டுவெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இன்று காலை 7.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்வு நடந்தது. இதில் அந்த காவல்துறை அதிகாரி காயமின்றி உயிர் தப்பினார். பலியானவர்களில் 6 காவலர்கள் ஒரு பெண், ஒரு குழந்தை அடங்கும்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் அந்த காவல்துறை அதிகாரிக்கு தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.