போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அக்கறை காட்டவில்லையெனில் சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கவேண்டி வரும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அக்கறையை காண்பிக்க வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், பிரிட்டன் வெளியுறவு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலங்கை குறித்த விஷயங்களில் அக்கறை செலுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பிரிட்டனும் தீவிரமாக ஆதரவளிக்கும் என்று வில்லியம் ஹேக் எச்சரித்துள்ளார்.