ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையின தலைமை அலுவலகத்தை குறிவைத்து இன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம்,அதனை அடுத்து அமைந்துள்ள நேட்டோ தலைமையகம் மற்றும் இன்ன பிற வெளிநாட்டு உளவு ஏஜென்சிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள நிலையில், அவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இந்த தற்கொலை தாக்குதல் நடைபெற்றதாகவும்,அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும் தாக்குதல் நடத்திய தீவிரவாத குழு ஒன்றின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே காபூலில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டையும் நடந்தது.இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.