ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி உரிமைகள் குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பின் விசேஷ அதிகாரியாக இலங்கையின் ஜெனீவாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி தாமரா குணநாயகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை அணிசேரா நாடுகள் அமைப்பு வழங்கியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தக்குழு, அரசாங்கங்களின் நடவடிக்கைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் உட்பட்ட பொருளாதார திட்டங்களை கண்காணிக்கும் கடமைகளை கொண்டுள்ளது.
இதன்படி தாமரா குணநாயகம், அரச அரசசார்பற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான இறுதி அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்பிக்கும் கடமையை கொண்டுள்ளார்.