இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டபோதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா, பயங்கரவாதத் தடைச் சட்டம் தனியாக உருவாக்கப்பட்ட சட்டம். இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றார்.
இதேவேளை, இந்தியாவோ அல்லது எந்தவொரு சர்வதேச நாடோ தந்த நெருக்கடி காரணமாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படவில்லை என்று கூறிய யாப்பா, நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டும் மக்களின் நலன் கருதியுமே அரசாங்கத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.