Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் - இலங்கை

எங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் - இலங்கை
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2011 (09:42 IST)
மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கொழும்பில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபட்சவும், ஜி.எல்.பெரிýம் அண்மையில் சீனாவுக்கு சென்றிருந்தனர். அப்போது, சீன அதிபர் வென் ஜியாபாவோ இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை பொருளாதார தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோன்ற சூழ்நிலை உருவானால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil