Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச

இறுதிப் போரில் பார்ப்பவர்களையெல்லாம் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபய ராஜபக்ச
லண்டன்/கொழும்பு , வியாழன், 28 ஜூலை 2011 (13:43 IST)
இலங்கை இறுதிப் போரின்போது, சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் காண்பவர்களையெல்லாம் கொல்ல கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஒப்புக்கொண்டுள்ளார்.

சேனல் 4 தொலைக்காட்சி, ஈழப் போர் தொடர்பான மேலும் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில்தான் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் தீவிர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக அதில் அவர் கூறுகிறார்.

இந்த இறுதிப் போரின் போது காண்போர் எல்லோரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரண் அடையும் போராளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்ச உறுதி அளித்தார்.அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த போராளிகளை அவரது தம்பியும், இலங்கை பாதுகாப்பு துறை செயலாளரும் ஆன கோத்த்தபய ராஜபக்ச கொலை செய்ய உத்தரவிட்டார்.

"கொலை செய்! லைசென்ஸ் தரப்பட்டுவிட்டது" என போர் குற்ற நிகழ்வுகளை மேற்கொள்ள கோத்தபாய உத்தரவிட்டார் என அவருடன் பணியில் இருந்த இராணுவ வீரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

"தேவை ஏற்படும்போது கொல்வது அவசியம்!" என கோத்தபாய தனது போர் குற்றத்திற்கு நியாயம் கற்றபித்தார். சரண் அடைந்த தமிழ் ஈழ விடுதலை போராளிகளை கொலை செய்ய பிரிகேடியர் ஷவேந்திரா சில்வாவிடம் உத்தரவிட்டார்.

அவரிடம் கோத்தபய உத்தரவிட்டதை நேரில் பார்த்த 58வது டிவிஷன் வீரரும் தற்போது ஆமோதித்து உள்ளார். கொலை செய்வதறகு லைசென்ஸ் தரப்பட்டுள்ளது என இலங்கை இராணுவ வீரர்களிடம் கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆயுதம் இல்லாமல் நிராயுத பாணிகளாக இருந்த அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்படடனர்.

பிரிகேடியர் சில்வா தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை துணை தூதராக நியூயார்க்கில் பணியாற்றுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil