Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: நாம் தமிழர் வேண்டுகோள்

Advertiesment
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: நாம் தமிழர் வேண்டுகோள்
, புதன், 20 ஜூலை 2011 (16:58 IST)
FILE
இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குத் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“யாழ்ப்பாணமமற்றும் கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் உள்ளுராட்சித் தேர்தல்களின் பின்னாலசர்வதேச சூழ்ச்சி உள்ளது என்பதை வெளிக்கொணர்வது இத்தருணத்திமுக்கியமானதாக உள்ளது. சனல் 4 செய்திச் சேவையினால் வெளியிடப்பட்ட “சிறிலங்காவினகொலைக்களம்” என்னும் ஆவணப்படம் மற்றும் ஏப்ரல் 2ஆம் திகதி ஐக்கிய நாடுகளசபையின் வல்லுனர்களினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாஅறிக்கை ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்சிறிலங்கா அரசாங்கமானது பன்னாட்டு அங்கீகாரத்தை பல்வேறு வழிகளில் நாடி நிற்கின்றதஎன்பது அனைவரும் அறிந்ததே.

திடீரென வடக்கில் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுததிட்டங்களை உருவாக்கி அவற்றை தெற்கில் இருந்து வந்த சிங்களவர்களைக் கொண்டநிறைவேற்றி வடக்கை சிங்கள மயமாக்கும் தனது மறைமுக வேலைத் திட்டத்தை அரசாங்கமமுனைப்புடன் நிறைவேற்றி வருகிறது. மக்களாட்சிக் கொள்கைகளுக்கு மதிப்புககொடுக்கும் ஒரு அரசாங்கமாக தன்னை பன்னாட்டு மட்டத்தில் காட்டிக் கொள்வதற்காதுப்பாக்கி முனையில் தேர்தல்களை நடாத்துவதோடு நிறைவேற்றபடப்படாத வாக்குறுதிகளையுமஅள்ளி வழங்கி வருகின்றது.

எங்களினதமிழ் சொந்தங்களின் சுய நிர்ணய உரிமைக் கனவுகளைக் கொடூரமாகச் சிதைத்ததோடு அது ஒரகேள்விக்குறியாகவும் தற்போது விடப்பட்டுள்ளது. தமிழர்களின் பாதுகாப்பு இந்அரசுக்கு எப்போதுமே முன்னுரிமையான விடயமாக இருக்கவில்லை. பன்னாட்டஅவதானிப்பாளர்களுக்கும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விட்டிருந்தது. ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினராலதாக்கப்பட்ட சம்பவம் இவர்களின் தமிழ் எதிர்ப்புப் போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அற்நிலையில் சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதி செய்ய இயலும்?

2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களினஎண்ணிக்கை 816,005 ஆக இருந்தது. தற்போது அது 481,791 ஆக குறைக்கப்பட்டு உள்ளதசிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் 331,214 பெயர்களை பட்டியலில் இருந்தஅகற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை மாற்றத்துக்கான எந்த ஒரு விளக்கமுமவழங்கப்படவில்லை.

ஆயுதபபோர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கபகுதிகளை சிங்கள மயமாக்குதல், படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்தல், தமிழ் பண்பாட்டை அவமதித்தல், சிங்கள மொழித் திணிப்பு, அடிப்படை மனிதத் தேவைகளமறுக்கப்படுதல், பாதுகாப்பு வலயங்கள் தொடர்ச்சியாகப் பேணப்படுதல் போன்செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் மீதான போர் தொடர்கின்றது. அங்கு வாழும் மக்களஅமைதியையும் நீதியையும் சட்ட ஒழுங்குகளையும் மனிதாபிமானத்தையும் வேண்டி நிற்கின்றனர். இந்த அரசாங்கம் இவற்றில் எதையுமே செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இவர்களிடம் இதை எதிர்பார்ப்பதும் எமக்கு பயனுள்ளதாக இருக்கப்போவதில்லை. இந்அரசாங்கமானது தமிழர்களை அடிமை நிலைக்கே இட்டுச் செல்கின்றது. இந்த நேரத்திலதமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் கபடத்தன்மையையும் சட்ட சீர்கேட்டையுமமனிதத்துக்கு எதிரான கொடூரத்தன்மையையும் எதிர்ப்பதற்கு ஒன்றிணைந்த சக்தியாக செயற்பவேண்டிய அவசியம் உள்ளது.

முதலாவதாபோர்க் குற்றம் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்த சிறிலங்கா அரசாங்கமசர்வதேசத்துக்கு அதற்குரிய பதிலை வழங்க வேண்டும். அப்படி ஒரு நாள் வரும் வரசிங்கள அடிவருடிகளாகச் செயற்படும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நாம் முற்றாககபுறக்கணிக்க வேண்டும். தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. ஒன்றிணைந்சக்தியாக முழு மனதுடனதமிழ்த் தேசியககூட்டமைப்புக்கதமிழர்கள் வாக்களிக்க வேண்டிய தருணம் இது. ஒன்றுபட்டால் உண்டவாழ்வு. ஒற்றுமையே பலம் என்பதை மனதில் நிறுத்தி வாக்களிப்போம்.

புலமபெயர்ந்து வாழும் உறவுகள் அனைவரும் தாயகத்தில் இருக்கும் நம் உறவுகளுக்கு அழைத்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கவாக்களிக்க வற்ப்புறுத்வேண்டுகிறோம” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil