விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசைப்பிரியாவின் மரணம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று, நியூயார்க்கைத் தளமாகக் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக் குழு அழைப்பு வலியுறுத்தியுள்ளது.
சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இசைப்பிரியாவின் இறந்த உடல் இலங்கை இராணுவத்தினருக்குப் பக்கத்தில் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது.
எனவே இசைப்பிரியா கொல்லப்பட்டார்; அதை ஒரு போர்க் குற்றமாக எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளராகப் பணியாற்றினார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே இதைப் பயன்படுத்தி, இந்த இறப்புக்குப் பொறுப்பானவர்களை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க சர்வதேச விசாரணை அவசியமாகும் என்றும் அக் குழு வலியுறுத்தியுள்ளது.