பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பழங்குடியினர் பகுதியில் இரண்டு இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
ஜம்ருத் பகுதியில் சாலை ஓரத்தில் நடந்த முதல் குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானார்.
அடுத்த சில நிமிடங்களில் அதே பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் அடுத்த குண்டு வெடித்தது. இதிலும் ஒருவர் பலியானார்;3 பேர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.