இந்தியாவின் உள்கட்டமைப்பிற்குச் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 84 ரூபாய் காணாமல் போய்விடுகிறது என்று கூறியுள்ள சமூக சேவகர் கிரண் பேடி, ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர்களை ஊழலில் இந்தியா இழக்கிறது என்று கூறியுள்ளார்.
சிக்காகோ நகரில் உலக விவகாரங்களுக்கான பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிரண் பேடி இவ்வாறு கூறியுள்ளார்.
ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால் உலகின் மிகவும் முன்னேறிய நாடாக இந்தியா ஆகிவிடும் என்றும், ஊழலில் இருந்து விடுபட்டால் மட்டும் போதும் அதன் கடன்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும் கிரண் பேடி கூறியுள்ளார்.
இந்தியாவில் ஊழல் தடையற்றுப் பெருகக் காரணம், ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு அங்கு இல்லாததே என்று கிரண் பேடி கூறியுள்ளார்.