இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
இதனால் சுலவேசி மாகாணத்தில் மனடோ நகரம் குலுங்கியது. கடலில் 10 கி.மீ. ஆழத்தில் தாக்கிய இந்த பூமி அதிர்ச்சியால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை.
சுனாமி தாக்கும் அபாயம் கிடையாது என்று இந்தோனேஷியா வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.