போர் ஒத்திகை தொடர்ந்து நடைபெற்றால் தென்கொரியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
தென் கொரியா தனது நட்பு நாடான அமெரிக்காவுடன் சேர்ந்து போஜியான்யாங் தீவில் கடற்படை மூலம் போர் பயிற்சி ஒத்திகை நடத்தியது. இதையடுத்து பதட்டம் மேலும் அதிகரித்தது.
வானிலை சரியில்லாததால் இந்த போர் ஒத்திகை சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பதட்டம் குறைந்தது. தற்போது தென்கொரியாவும், அமெரிக்க ராணுவமும் சேர்ந்து போர் ஒத்திகையை தொடங்கியுள்ளன.
கடற்படையினர் யான் பியாங் தீவில் நேற்று முன் தினம் முதல் மீண்டும் போர் ஒத்திகையை தொடங்கினர். அதே நேரத்தில் தென்கொரி யாவின் மலைப்பகுதியான யோசியானில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள் ளது. வடகொரியாவின் எல்லையில் உள்ள இந்த மையத்தில் தென்கொரியா ராணுவம் பயிற்சி மேற்கொண்டுள்ளது.
இங்கு 800 வீரர்கள், 30 பீரங்கிகள், 11 கவச வண்டிகள், 6 ஜெட் விமானங்கள் மற்றும் 36 பேர் விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் மற்றும் பல நவீன ஆயுதங்களை குவிக்கப்பட்டு போர் பயிற்சி நடக்கிறது. குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தென்கொரியா மீது மீண்டும் போர் தொடுக்க நேரிடும். அப்போது அந்நாட்டின் மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.