இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர அதிகாரிகள் தீவிரவாதிகள் குறித்த தகவல்களை லஞ்சம் கொடுத்து டெல்லி காவல்துறையினரிடம் இருந்து திரட்டி வருவதாக அதிர்ச்சி தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட தகவல்களை உள்துறை அமைச்சகம் போன்ற அதிகாரபூர்வ மையங்கள் மூலமாகவே அமெரிக்க தூதரகம் பெற வேண்டும் என்பது விதி.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் டெல்லி சிறைச்சாலைகளில் உள்ள கடைநிலை காவலர்கள் மூலமாக ரகசிய தகவல்களை திரட்டி வந்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
தீவிரவாத தாக்குதல்கள், அவர்களின் நடமாட்டம் குறித்த தகவல்களை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் பெற்றுள்ளது அரசை அவமதிக்கும் செயல் என்று உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருநாடுகளிடையேயான உறவை பாதிக்கும் செயல் என்றும் மத்திய உள்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.