இனபடுகொலை புரிந்தத சூடான் நாட்டு அதிபர் பஷீருக்கு உலகளாவியல் குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பித்தது போல இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராகவும் அதே போன்ற கைது ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று மலேசியா எம்.பி. மு.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
இனப்படுகொலையன் மகிந்த ராஜபக்சே, ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவிட்டு லண்டனில் உல்லாச ஊர்வலம் வந்த இடத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிராக பேரணி நடத்தினார்கள். அதனை கண்டு தத்தளிக்கும் நிலைமையில் ராஜபக்சேவும் தனது சகாக்களும் தப்பி சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மானமுள்ள தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அங்கே ராஜபக்சே போன்ற இனவாதிகளின் கால் பாதங்களை பதிக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனை ராஜபக்சே புரிந்து கொள்ளவேண்டும். தனது நாட்டில் அனைத்து போர் குற்றங்களையும் செய்த பிறகு எந்த சூழ்நிலையிலும் நிம்மதியாக உலகம் சுற்ற முடியாது என்பதனை ராஜபக்சே மறந்து விடக்கூடாது.
ராஜபக்சே தனது கொடிய இராணுவத்தை வைத்து பல அப்பாவி மக்களை கொன்ற உண்மை அம்மபலமாகியுள்ளது. அதனை தொடர்ந்து, தான் போர் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்த அனைத்து போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப் படுகொலை அனைத்தும் வெட்ட வெளிச்சமாகும்.
அதே வேளையில், ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை, இதன் தொடர்பில் முழுமையான நேர்மையான விசாரணை ஒன்றை ஆரம்பிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மனித உயிர்கள் வதைக்கப்பட்டதின் ஆழங்களை உலக நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டும். சூடான் நாட்டு அதிபர் பஷீர் இனபடுகொலை புரிந்ததின் காரணமாக உலகளாவியல் குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பித்தது போல இலங்கை அதிபர் மகிந்தவுக்கும் அதே போன்ற கைது ஆணை ஒன்றை பிறப்பிக்க வேண்டும்.
இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை இராணுவம். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்கள் வெளியிடப்படுள்ளன.
இவை அனைத்தையும் ஆதாரமாக கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபை மனிதாபிமான அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தி மகிந்த ராஜபக்சேவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.