கம்போடியாவில் தண்ணீர் திருவிழா நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் பெனோம் பென் என்ற இடத்தில் நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டு கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். அப்போது ஆற்றுப் பாலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மின்விளக்குகளில் மின் கவுசி ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்து நூற்றுக்கணக்கானோர் அலறி அடித்துக் கொண்டு ஒரே நேரத்தில் பாலத்தை கடக்க முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 350 க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து மிதிப்பட்டும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர்.
நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 100 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.