பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மக்களுக்கு எதிரானவர் என்று அல்கய்டாவின் 2ஆம் மட்டத் தலைவர் அல் ஜவாஹிரி குற்றம்சாட்டியுள்ளார்.
அல் கொய்தாவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவரான அய்மன் அல் ஜவாஹிரி நேற்று சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையொன்றில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும்,
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் போரையும் புனித குரானுக்கு எதிரான அமெரிக்காவின் துரோகத்தையும் சர்தாரி ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் சர்தாரியை திருட்டு அதிபர் என்று வர்ணித்து ஆவேசமாக தாக்கிப் பேசியுள்ளார். பாகிஸ்தான் மக்கள் சர்தாரியின் துரோகச் செயல்களை எதிர்க்காமல் வாய் முடி மௌனமாக இருப்பதன் மூலம் பெரும் பாவத்தைச் செய்து வருகின்றனர் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.