பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தானின் வடக்குவர்கிஸ்தான் உள்ளது. அங்குள்ள ஷவால் பகுதியில் வீடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, அங்குள்ள வீடுகள் மீது அமெரிக்கா ராணுவத்தினர் ஆளில்லா விமானங்கள் மூலம் 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.
இச்சம்பவத்தில் தீவிரவாதிகள் 11 பேர் உயிர் இழந்தனர். அவர்கள் அனைவரும் ஹக்கானி மற்றும் ஹபீஷ்குல் பகதூர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த தகவலை பாகிஸ்தான் அரசு டி.வி. தெரிவித்தது.