இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த அயல்நாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை குடியேற்றத்துறை அதிகாரிகள் பெரைரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு வரும் அயல்நாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதிகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும் என்றும் சிங்கப்பூர், மாலத்தீவுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு மட்டுமே இனி விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த அயல்நாட்டினர்களுக்கு இந்த வசதி இனி வழங்கப்படாது என்றும் அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இலங்கை துணை தூதரகம் மூலமே அல்லது இலங்கை குடியேற்றத்துறையிடமோ விண்ணப்பித்து விசா பெற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசின் புதிய நடவடிக்கையால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே 30 நாட்களுக்கு விசா வழங்கும் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.