காஷ்மீரில் ஏதாவது நடந்து அதனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே உரசல் முற்றினாலோ அல்லது போர் அபாயம் ஏற்பட்டாலோ, தாலிபான்களிடம் அணு ஆயுதங்களை அளித்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் தூண்டலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.
"நாங்கள் இந்த ஆயுதங்களை பயன்படுத்த விரும்பைல்லை, ஆனால் இந்த ஆயுதங்களை நாங்கள் தாலிபான்களிடம் கொடுத்து எங்கள் வேலையை அவர்களிடம் விட்டு விடுவோம்." என்று பாகிஸ்தான் கருதும் அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க அணு ஆயுத பரவல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பாப் கிரகாம் அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கிரகாம், "இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாபு நடைமுறைகளை விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம்." என்றார்.
இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் இமாதிரியான பேச்சு வார்த்தைகளிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு முன்னேற்றம் கண்டு வருகிறது.
ஆனால் உண்மையான வைரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே இத்தகைய ஆக்கபூர்வ விவாதங்கள் இல்லை என்று கூறினார் கிரகாம்.