பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்துவரும் குண்டு வெடிப்புகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் 45 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மேலும் 5 குண்டு வெடிப்புகள் நடந்தது. ஆனால் அதில் யாருக்கும் பாதிப்பேற்படவில்லை.
பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்துவரும் இத்தாக்குதல்களை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கண்டித்துள்ளதாகக் கூறியுள்ள அவருடைய பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி, “இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற வன்செயல்களை எதையும் கூறி நியாயப்படுத்த முடியாது” என்று அவர் கூறியதாகத் தெரிவித்தார்.