சிலியில் நேற்று ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான படு பயங்கர நில நடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமி ஆகியவற்றிற்க்கு பலி எண்ணிக்கை 300ஐக் காட்டிலும் அதிகரித்துள்ளது. சுமார் 20 லட்சம் பேர் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நில நடுக்கத்தினால் சுமார் 80 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. கன்செப்சியான் நகரில் நில நடுக்கத்தை அடுத்து ஆற்று நீர் உயரே எழும்பி அருகில் உள்ள இடங்களை மூழ்கச்செய்துள்ளது
ஆங்காங்கே இடிந்த கட்டிடஙளும் வெடித்துப் பிளந்த சாலைகளுமாக சிலி நாடு காணப்படுகிறது..
ஹைட்டியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவு பூகம்பத்தைக் காட்டிலும் 700 அல்லது 800 மடங்கு சக்தி வாய்ந்த பூகம்பம் நேற்று சிலியில் ஏற்பட்டது. கன்செப்சியான் என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னமும் தகவல் பெரிய அளவுக்கு வரவில்லை.
கன்செப்சியான் நகரில் 15 மாடிக் கட்டிடம் தரைமட்டமானது. நாட்டின் மிகப்பெரிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகிவிட்டது.
பூகம்பத்திற்கு பிறகு சற்று முன் வரை சுமார் 79 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது பின் அதிர்வுகளும் ரிக்டர் அள்வுகோலில் அதிகபட்சமாக 6.1 என்று பதிவாகியுள்ளது.
சக்தி வாய்ந்த சுனாமி அலைகள் தாக்கி சிலி துறைமுகத்தில் கப்பல்கள் சிதைந்து போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
பிலிப்பனிஸ் நாட்டிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1.00 மணியளவில் அங்கு சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்ட்ரேலியாவின் டாஸ்மேனியா பகுதியிலும் லேசான சுனாமி அலை தாக்கியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தீவிரமான சுனாமி இன்று தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹவாய் தீவுகளிலிருந்து மக்களை வெளியேற்ற அமெரிக்க விமானங்களையும் இயக்கி வருகிறது. இன்று மதியம் இங்கு சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் சுமார் 3 மீ. உயரம் அலை எழும்பி வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.