இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் பள்ளிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வின் பள்ளி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வரும் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர மூன்று நாடுகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகியவை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் துப்பாக்கிகள் மற்றும் விஓல் அம்புகளுடன் சண்டையிடுவதற்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு சான்றாக மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட டாரெம் கோஸா என்ற 8 ஆம் வகுப்பு மாணவன், நக்சலைட்டுகள் தம்மை எவ்வாறு கடத்தினர் என்பது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் அளித்துள்ள வாக்குமூலமும் குறிப்பிடப்பட்டுள்ளது.