Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸி.: மாடலிங் பெண்ணை கற்பழித்ததாக இந்தியர் மீது குற்றச்சாற்று

Advertiesment
ஆஸி.: மாடலிங் பெண்ணை கற்பழித்ததாக இந்தியர் மீது குற்றச்சாற்று
மெல்பர்ன் , திங்கள், 18 ஜனவரி 2010 (19:09 IST)
மாடலிங் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி ஆஸ்ட்ரேலிய மாடலிங் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்தியர் ஒருவர் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வருபவர் பால் ராஜேந்திரன்.

இந்தியரான இவர், ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த 23 வயது மாடலிங் பெண் ஒருவரிடம் தாம், 'லா பெர்லா' என்ற உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், எனவே அவருக்கு விளம்பர மாடலிங் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் பொய்யான தகவலைக் கூறி ஆசைக் காட்டியுள்ளார்.

இதை நம்பிய அந்த பெண், ராஜேந்திரனை பார் ஒன்றில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் மது அருந்தியபடியே மாடலிங் வாய்ப்பு குறித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.

இந்நிலையில் மது அருந்திய்தால் ஏற்பட்ட போதை காரணமாக அந்த இளம்பெண் தள்ளாட, அவரை தனது அலுவலகத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.முன்னதாக அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், மது அருந்தியதால் ஏற்பட்ட போதை காரணமாக அவரால் அதனை தடுக்க இயலாமல் போய்விட்டது.

போதை தெளிந்த பின்னர் அந்த இளம்பெண், காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டதோடு, அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மெல்பர்ன் நீதிமன்றம் ஒன்றில் இன்று நடைபெற்றது. அப்போது அரசு வழக்கறிஞர், மேற்கண்ட விவரங்களை தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil