பொருளாதாரச் சரிவில் இருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளாத காரணத்தால், நடைமுறையில் உள்ள பொருளாதாரச் சலுகை தொடரும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் இன்று அந்த மாநாட்டில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார சரிவில் இருந்து தப்பித்து விட்டோமா என்று தற்போது கூறுவது சரியானதாக இருக்காது என்றும், தற்போது நடைமுறையில் உள்ல பொருளாதாரச் சலுகைகளை திரும்பப் பெறுவதற்கு காலம் இன்னும் கனிந்து வரவில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.