Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் கனமழை: 13 பேர் பலி

Advertiesment
பாகிஸ்தானில் கனமழை: 13 பேர் பலி
கராச்சி , ஞாயிறு, 19 ஜூலை 2009 (10:38 IST)
பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் பெய்து வரும் தொடர் மழைக்கு இன்று அதிகாலை வரை 13 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பருவமழை துவங்கியுள்ளது. கராச்சியில் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிந்து மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அலுவலகத்திற்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அலுவலக கட்டிடத்திலேயே தங்கியுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40க்கும் அதிகமானோர் பல்வேறு சம்பவங்களில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil