இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் செயல்படும் தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று காலை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 47 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் புலித்தேவன் கூறுகையில், முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் சிறிலங்கப் படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.
அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது, இன்றைய தாக்குதலில் 56 பேர் காயமடைந்ததாக கூறினார்.
இதற்கிடையில், முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தவில்லை என சிறிலங்க அரசு மறுத்துள்ளது.