இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த மனிதர்; மரியாதை தெரிந்தவர்; அறிவாளி என அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா புகழ்ந்துள்ளார்.
லண்டனில் நடந்த ஜி-20 மாநாட்டில் அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் முதன் முறையாக சந்தித்துப் பேசினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங் தேர்ந்த அறிவாளி; சிறப்பான, மரியாதை தெரிந்த மனிதர் எனப் புகழ்ந்தார்.
பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னதாகவே இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர் என்றார்.
இதன் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியாவில் உங்களுக்கு (ஒபாமா) மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது” என்று கூறினார்.