வன்னியில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணை , வான் தாக்குதலில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 64 பேர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவில் உள்ள இரணைப்பாலை, மாத்தளன் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதேநேரத்தில் சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் விமானப் படையினரும் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த இரண்டு தாக்குதல்களிலும் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர் என்று புலிகள் ஆதரவு இணையத் தளமான புதினம் தெரிவிக்கிறது.