இலங்கையின் வன்னி பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வன்னியில் உள்ள வலைஞர்மடம், பொக்கணை ஆகிய மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது நேற்று அதிகாலையும், பிற்பகல் 3.30 மணியளவிலும், சிறிலங்கா படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், மேலும் 49 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 12 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.