இந்தோனேஷியாவில் தொடர்ந்து 4 மிதமான நில நடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. ஆனால் இதனால் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் இல்லை என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவு கோலில் இந்த 4 மித நில நடுக்கங்களும் முறையே 5.7, 5.4, 5.2, மற்றும் 5.0 என்று பதிவாகியிருந்தது.
வடக்கு சுலாவேஸி, மேற்கு பபுவா, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி உலகை உலுக்கிய சுனாமியை உருவாக்கிய கடலடி பூகம்பத்தின் மையப் பகுதியான பன்டா அஸே ஆகிய பகுதிகளில் இந்த மித நில நடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
"பசிபிக் நெருப்பு வளையம்" (the Pacific Ring of Fire) என்று வர்ணிக்கப்படும் பூகம்ப நடவடிக்கை மிகுந்த பகுதியில் இந்தோனேஷியா தற்போது உள்ளது..