Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்ட்ரேலியாவில் காட்டுத்தீ: 128 பேர் பலி

Advertiesment
ஆஸ்ட்ரேலியாவில் காட்டுத்தீ: 128 பேர் பலி
, திங்கள், 9 பிப்ரவரி 2009 (10:30 IST)
ஆஸ்ட்ரேலியாவின் வரலாறு காணாத இயற்கைப் பேரழிவு என்று வர்ணிக்கப்படும் காட்டுத் தீயிற்கு இதுவரை 128 பேர் பலியாகியுள்ளனர். மீட்புப் படையினர் சடலங்களை மேலும் கண்டெடுத்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கடும் சேதத்திற்குள்ளான கிங்லேக் மாவட்டத்தில் மட்டும் சுமார் 550 வீடுகள் தீக்கிரையானதாக ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 800 விட்டுகள் தீக்கிரையாகியுள்ளன. தெற்கு விக்டோரியா மாகாணத்தில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ மேலும் தீவிரமடையும் சூழ்நிலை நிலவுதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு 5 இடங்களில் மூண்டுள்ள பெரும் தீ பேரச்சத்தை விளைவிப்பதாயுள்ளது என்று தெரிகிறது.

இதில் குறிப்பாக பீச்வொர்த் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயிற்கு மட்டும் 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.

பெரிதும் பாதிக்கப்பட்ட கிங்லேக், மற்றும் மேரிஸ்வில் ஆகிய ஊர்கள் முழுதும் தீக்கிரையாகியுள்ளதாகவே ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிங்லேக்கிற்கு அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் வெறும் 5 வீடுகளே மீதமுள்ளன என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil