Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வன்னிப் போரில் 800 படையினர் பலி: 700 பேர் காயம்

வன்னிப் போரில் 800 படையினர் பலி: 700 பேர் காயம்
, வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (16:50 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளு‌க்கு எ‌திரான கடந்த சில நாட்களாக வ‌ன்‌னி‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் மோதல்களில் குறைந்தது 800 படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 700க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் இதுவரை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான படையினரின் உடலங்கள் எதுவும் உறவினர்களிடம் அளிக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் கொழும்பில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவரங்களை தருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்து அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு ராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்வையிட அனுமதிக்குமாறும் பெற்றோரும் மனைவிமாரும் படைத் தளபதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதே தருணத்தில் முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800க்கும் அதிமான படையினர் உயிரிழந்துள்ளனர். 700க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்பதை கொழும்பில் உள்ள உயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வன்னியில் நடந்த போரில் கொல்லப்பட்ட படையினரின் மாதச் சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே அவர்களது உறவினர்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

போரில் உயிரிழந்த உயரதிகாரிகளின் சம்பளம் மட்டுமே அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil