மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தாங்கள் நடத்தி வரும் விசாரணை குறித்த விவரங்களை விரைவில் இந்தியாவிடம் தெரிவிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான தன்மையை முன்னிலைப்படுத்தி உரிய விசாரணை நடத்தப்பட்டு, அதுபற்றிய விவரங்களை இந்திய அரசிடம் கொடுப்போம் என்று இஸ்லாமாபாத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறினார்.
மும்பை தாக்குதல் தொடர்பான இந்தியாவின் ஆவண்ங்கள் குற் இத்து முழு அளவிலான விசாரணையை நடத்திவருவதாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்ட அமைச்சகத்தின் இறுதி தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் நம்பிக்கையை பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக பெறும் என்றார் அவர்.
நீதியை பாகிஸ்தான் நிலைநாட்டும் என்றும், வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
விசாரணையின் முடிவுகள் எப்படி இருப்பினும், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் பயன்படுத்தப்படுவதை தங்கள் நாடு உறுதிப்படுத்தும் என்றும் யூசுப் ரஸா கிலானி குறிப்பிட்டார்.