கொலம்பியாவின் வடமேற்குப் பகுதியில் பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
கார்மென் டி அட்ரடோ என்ற இடத்திற்கு அருகே 200 மீட்டர் பள்ளத்தில் அந்தப் பேருந்து உருண்டு விழுந்ததாகவும், பனாமா எல்லையை ஒட்டியுள்ள பகுதி அது என்றும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்தப் பேருந்தில் 34 பேர் பயணம் செய்ததாகவும், மெடலின் என்ற இடத்தில் இருந்து ஆன்டிகுயா மாகாணத்திற்கு சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உயிரிழப்பு 25ஐத் தாண்டும் என்று செய்திகள் தெரிவித்துள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.