அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்து, புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
துணை அதிபர் ஜோ பைடன், ஹிலாரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அதிபரும், ஹிலாரியின் கணவருமான பில் கிளிண்டன், மகள் செல்சியா மற்றும் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பில் கிளிண்டன் தவிர முன்னாள் அதிபர்கள் பலரும் ஹிலாரி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்தப் பதவி தமக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று ஹிலாரி அப்போது குறிப்பிட்டார். அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏராளமான காரியங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹிலாரி தனது வெளியுறவு பொறுப்பை அதிகாரப்பூர்வமாக கடந்த மாதம் 21ஆம் தேதி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.