சர்வதேச பிரச்சனைகளில் ஒன்றாக இணைந்து செயல்பட சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும், அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவும் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், அதிபர் ஜிண்டாவோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா இன்று பேசியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த உரையாடலின் போது பொருளாதார நெருக்கடி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா-சீனா இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவது, உலகப் பிரச்சனைகளில் ஒன்றிணைத்து செயல்படவும் இருவரும் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.