Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் 20ல் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்

ஆகஸ்ட் 20ல் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்
, வியாழன், 29 ஜனவரி 2009 (13:24 IST)
ஆப்கானிஸ்தான் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ஜனநாயக முறையில் அந்நாட்டின் அதிபரைத் தேர்வு செய்வதற்காக 2வது முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என தற்போதைய அதிபராக உள்ள ஹமீத் கர்சாய் ஏற்கனவே உறுதிபடத் தெரிவித்திருந்தாலும், அரசு அதிகாரிகள் மத்தியில் பரவியுள்ள ஊழல், தாலிபான் பயங்கரவாதிகள் தினசரி நடத்தும் தாக்குதல்கள் போன்றவை தேர்தலில் அவருக்கு பாதகமான விடயங்களாக கருதப்படுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil