Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியூ கலிடோனியாவில் கடும் நிலநடுக்கம்

Advertiesment
நியூ கலிடோனியாவில் கடும் நிலநடுக்கம்
, திங்கள், 19 ஜனவரி 2009 (12:11 IST)
நியூ கலிடோனியாவின் லாயல்டி தீவுப்பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று காலை 9.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்த போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என நிலநடுக்க ஆய்வாளர் க்ளைவ் கோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil