Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது: கயானி

பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது: கயானி
, சனி, 17 ஜனவரி 2009 (17:29 IST)
மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணித்து, அமைதியான சூழலை பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டுக்கு வந்துள்ள இங்கிலாந்து அயலுறவு செயலாளர் டேவிட் மிலிபந்திடம் ராணுவத் தளபதி கயானி தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்காக எந்தவித நெருக்குதலுக்கும் அடிபணிந்து செல்வது, நாட்டின் பாதுகாப்பில் சமரசமும் செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளாது என்றும் கயானி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் செ‌ன்றுள்ள டேவிட் மிலிபந்தை, கயானி சந்தித்துப் பேசினார்.

அப்போது எந்தவித நெருக்கடியையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக கயானி கூறியதாக ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பின்னர் பேசிய மிலிபந்த், போர் என்பது எந்தத் தரப்பிற்கும் ஆதாயத்தைத் தராது. எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும். இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் இங்கிலாந்தும் பங்கெடுக்கும் என்றார்.

இச்சந்திப்பின் போது மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தானின் நிலைப்பாடு, பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போர் மற்றும் இதர உள்நாட்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil