ஜகார்த்தா: இந்தோனேஷியக் கப்பல் ஒன்று, கடுமையான புயல் காற்றில் சிக்கி கடலில் மூழ்கியது. அதில் இருந்த 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேற்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், கப்பலில் இருந்து இதுவரை 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் ஜகார்த்தாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு சுலாவேஸி கடலில், 250 பயணிகள் 17 கப்பல் ஊழியர்களுடன் இந்த கப்பல் சென்று கொண்டிருந்த போது, கரையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பலில் 18 டன் ரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், கடுமையாக வீசிய புயல் காற்றினால் நடுக்கடலில் தத்தளித்து மூழ்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
பயணிகளில் பெரும்பாலானவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால், 250 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று இந்தோனேஷிய அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.