இஸ்ரேலின் மேற்குக்கரை நகரான காஸாவை இஸ்ரேலிய ராணுவம் முற்றிலுமாக சுற்றி வளைத்ததுடன், ஹமாஸ் இயக்கத்தினர் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தரை, கடல், விமானப் படைகள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் நேற்று காஸா நகருக்குள் நுழைந்தது. அடுத்த ஒரு சில மணி நேரத்திலேயே அந்நகரை முற்றிலுமாக சுற்றி வளைத்தது.
பீரங்கிகள், ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக காஸா நகரின் ஜபாலியா மற்றும் பெய்ட் லஹியா ஆகிய வடக்குப் பகுதிகளில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக தீவிர சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு நேற்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாகவும், இதில் 100க்கும் அதிகமானோர் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவுத் தட்டுப்பாடு : தீவிர சண்டை காரணமாக காஸா நகரில் உணவுப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையும், மின் தட்டுப்பாடும் நிலவுவதால் அந்நகர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.