Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்கிறது

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்கிறது
, செவ்வாய், 30 டிசம்பர் 2008 (17:59 IST)
எல்லைப்பகுதி மீது ராக்கெட் தாக்குதலை ஹமாஸ் இயக்கத்தினர் முற்றிலுமாக நிறுத்தும் வரை அவர்களுடன் எந்தவித போர்நிறுத்தமும் செய்து கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை இன்று 4வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகிறது.

பாலஸ்தீனம் மீது படையெடுக்கும் நோக்குடன் காஸா எல்லையில் இஸ்ரேல் தனது தரைப்படையை குவித்து வருகிறது. அதே தருணத்தில் இஸ்ரேல் விமானப்படை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் காஸா பகுதியில் தாக்குதல் நடத்தியது. இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு 2 சிறுமிகள் உட்பட 12 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலையில் 348 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் காயமடைந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் 62 பேர் பொதுமக்கள் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 இஸ்ரேலியர்கள், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil