பிரான்ஸ் அதிபர் சர்கோஸியை கொலை செய்யும் எண்ணத்துடன் அவரது மாளிகைக்குள் நுழைய முயன்ற 25 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டின் தி சன் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அதிபர் மாளிகையான எல்லிஸி அரண்மனையில் நேற்று அதிபர் சர்கோஸி தங்கியிருந்த சமயத்தில், ராணுவத்தினர் பயன்படுத்துவது போன்ற உடையை அணிந்த ஒரு இளைஞர் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரை விசாரித்து சோதனையிட்ட போது அவரிடம் கத்தியும், லேசர் துப்பாக்கியும் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று மதியம் நடந்த இச்சம்பவம், அதிபர் சர்கோஸியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக கருதுவதாக சர்கோஸியின் பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.