பிலிப்பைன்ஸின் வடகிழக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேரின் கதி என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் லுஸோன் ஜலசந்தியில் உள்ள கலாயன் தீவில் இருந்து ககாயன் மாகாணத்தில் உள்ள அபர்ரி நகருக்கு 100 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது ககாயன் ஆற்றில் பல்லேஸ்டெரியோஸ் பகுதிக்கு அருகே நேற்றிரவு படகு கவிழ்ந்ததாக காவல்துறை மூத்த அதிகாரி அலெக்ஸ் சான்டோஸ் தெரிவித்தார்.
தகவலறிந்த பல்லேஸ்டெரியோஸ் நகர மக்கள் 43 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இவ்விபத்தில் ஒரு வயதே ஆன சிறுவனும் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.