ஈராக்கின் வடக்குப் பகுதியில் கிர்குக் நகரில் உள்ள அப்துல்லா உணவு விடுதியில் தற்கொலைப்படைத் தீவிரவாதி நேற்று நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர். 120-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அரபு பழங்குடியின தலைவர்களுடன் குர்திஷ் அதிகாரிகள் இந்த விடுதியில் பேச்சு நடத்திக் கொண்டிருந்த் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குர்திஸ்தான் விடுதலை அமைப்பின் உறுப்பினர்களும், அரபு தலைவர்களும் மதிய உணவு சாப்பிட்ட போது, தற்கொலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் இத்தாக்குதலை நடத்தியதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
கிர்குக் பகுதியில் பதற்றத்தை குறைப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துவதற்காக கூடியிருந்தபோது, இந்தத தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின் நிறைவு நாளான நேற்று, உணவு விடுதியில் ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் குழுமியிருந்தத போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு கிர்குக் நகரில் இதே பெயரில் செயல்பட்ட உணவு விடுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.