வடக்கு ஜப்பானில் உள்ள அணு மின்சக்தி நிலையத்தில் தீப்பிடித்தது. என்றாலும் இதனால் அணுக் கதிர்வீச்சு எதுவும் ஏற்படவில்லை என்று அணுசக்தி நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்க விளைவுகளிருந்து காப்பதற்காக குழாய்களை வெல்டிங் செய்யும் பணி காஷிவஸாகி-காரிவா அணுமின் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது திடீரென தீப்பற்றியது.
இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த அணுசக்தி நிலைய வளாகம் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி, மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதுடன், அங்கு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வநதன.
கடந்த 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஐ. நா. அணுசக்தி கண்காணிப்புக் குழு இந்த நிலையத்தில், நிலநடுக்கத்திற்கு பின்னர் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.