கனடாவில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான அரசை நீக்கிவிட்டு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான உடன்பாட்டில் அந்நாட்டின் 2 முக்கிய எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
அந்நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் சிறுபான்மை அரசை பதவியில் இருந்து நீக்குவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் முக்கிய எதிர்க்கட்சிகளான தேசிய ஜனநாயக கட்சியும், லிபரல் கட்சியும் புதிய கூட்டணியை ஏற்படுத்தின.
இதற்கு மற்றொரு எதிர்க்கட்சியான கியூபிகோஸிஸ் பிளாக் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று கூட்டணி ஆட்சிக்கான உடன்பாட்டில் லிபரல் கட்சியின் தலைவர் ஸ்டீபனி டியான் முதலில் கையெழுதிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன், கியூபிகோஸிஸ் பிளாக் கட்சித் தலைவர் கில்லிஸ் டுஸிப்பி ஆகியோரும் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி உடன்பாட்டின்படி லிபரல் கட்சியின் தலைவர் ஸ்டீபனி டியான் அடுத்தாண்டு மே மாதம் வரை அந்நாட்டு பிரதமர் பதவியில் இருப்பார் என்றும், அதன் பின்னர் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என கூட்டணி உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது.