இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் கடும் போரில் 12,000க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பலித ரன்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், அதே அளவு படையினர் அல்லது அதைவிட அதிகளவு படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
"படுகாயமடைந்து உள்ளவர்களில் பெரும்பாலானோர் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டுள்ள படையினரில் பெரும்பாலானோர் 19 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால், சுமார் 8,000 இளம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர்." என்று பலித ரன்கே பண்டார கூறியதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.